கோவை : வனப் பகுதிகளைப் பாதுகாக்க உதவி செய்து வரும் பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆனைகட்டி பகுதியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதியில் கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில், வனப் பகுதிகளைப் பாதுகாக்க உதவி செய்து வரும் பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் தீபாவளிப் பண்டிகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பனப்பள்ளி, கொண்டனூர், கொண்டனூர் புதூர், கண்டிவலி, ஜம்புகண்டி, கூட்டுப்புலிக்காடு மற்றும் ஆலமரமேடு போன்ற மலைக்கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

ஆலமரமேடு பகுதியில் இருக்கும் ஐ.எஃப்.எஃப்.சி.ஓ., வளாகத்தில் நேற்று நடந்த இந்தக் கொண்டாட்டத்தின் போது, கோவை ஆயுதம் கலை குழுவினருடன் இணைந்து வயது வித்தியாசமின்றி அனைவரும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். அதோடு, சிலம்பம், தப்பாட்டம், சுருள்வாள் மற்றும் தீ நடனம் போன்றவையும் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறையின் அதிவிரைவுப் படை வீரர்களும் கலந்துகொண்டனர்.