கோவை: கோவையில் நடந்த ஒரு கோவில் கும்பாபிஷேகம் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியும் ஒயிலாட்டம் ஆடியதைக் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை: கோவையில் நடந்த ஒரு கோவில் கும்பாபிஷேகம் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியும் ஒயிலாட்டம் ஆடியதைக் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
கைகோலபாளையத்தில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆறுக்குட்டி கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. இதற்கு, அப்பகுதி ஊர் பொதுமக்கள் சிலர் நடனமாடினர். அவர்களோடு, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆகியோர் நடனமாடி அசத்தினர். சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியோடு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் ஓயிலாட்டம் ஆடியதை அங்குள்ள பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.