கோவை : சரவணம்பட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் மதுபோதையினால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி அடுத்த பதிகவுண்டர் தோட்டம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்த மர்ம நபர்கள், தலையில் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர், கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் என்றும், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவின் குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, கணபதி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிசா மாநில தொழிலாளர்களிடையே நேற்று இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சச்சின் (30) என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேரை பிடித்துள்ளனர். அதேபோல, சரவணம்பட்டி போலீசார் இரண்டு கொலைகள் தொடர்பாக அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.