கோவை : குடும்பத் தலைவர்கள் மதுவிற்கு அடிமையானதால், மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை நினத்துக் கூட பார்க்க முடியாத குடும்பங்கள் இருந்து வரும் நிலையில், ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் "நம் வீடு நம் பண்டிகை" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை : குடும்பத் தலைவர்கள் மதுவிற்கு அடிமையானதால், மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை நினத்துக் கூட பார்க்க முடியாத குடும்பங்கள் இருந்து வரும் நிலையில், ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் "நம் வீடு நம் பண்டிகை" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் போனஸ் கிடைக்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் காலம். ஆனால், இன்னும் சில வீடுகளிலோ குடும்ப தலைவன் வாங்கும் போனஸ் சரியாக அவர்கள் குடும்பத்தில் போய் சேர்வதில்லை. இதற்கு காரணம் குடிப்பழக்கம்.
இன்னும் நம் நாட்டில் எவ்வளவோ பேர் இப்படி தான் இருக்கிறார்கள். வாங்கும் சம்பளம் மற்றும் போனஸ் போன்றவற்றை வீட்டில் கொடுத்து மகிழ்ச்சிக்கு வித்திடாமல் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்தின் சந்தோசத்தைக் கெடுக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஈர நெஞ்சம் அறக்கட்டளை காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் "நம் வீடு நம் பண்டிகை " என்னும் தலைப்பில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளையும், அதனால், குடும்பத்திற்கு ஏற்படும் துன்பங்களையும், குடிப்பழக்கத்தினால் குழந்தைகளுக்கும் சுற்றியுள்ளோர்களுக்கும் ஏற்படும் விளைவினை பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், குடிப்பழக்கத்தை தடுப்போம் என்பதனை வலியுறுத்தியும் தெருவோரம் உள்ள ஆதரவற்றவர்கள் ஆதரவளிக்ககோரி நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டது.
அப்போது, கடின உழைப்பின் அங்கீகாரமாக ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் போனஸ் பணம் மகிழ்ச்சியாக குடுமப்பத்துடன் கொண்டாடவே, அது குடிக்க அல்ல என்பது வலியுறுத்தப்பட்டது. உலகில் பெரும்பான்மையான குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு பெற்றோர்களின் குடிப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. நாளை உங்களது குழந்தைக்கும் இதே நிலை ஏற்படாமல் இருக்க குடியை மறப்போம், குடும்பத்தை காப்போம், என் குடும்பம் என் மகிழ்ச்சி என்று வலியுறுத்தி ஆதரவற்ற முதியவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொது மக்களிடையே பெரும்வரவேற்பை ஏற்படுத்தியது.
மேலும், இப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புபவர்கள் அதற்கான விழிப்புணர்வையும், வழிமுறைகளையும் அறிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை அமைப்பினரை கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஈரநெஞ்சம் அறக்கட்டளை - 9080131500