கோவை : சிங்காநல்லூர் குளத்தில் இயற்கைச் சூழலை உருவாக்கும் விதமாக, மருத்துவ தாவரங்களை விதைக்கும் பணியில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கிய முதல்நாள் பணியின் போது, ஈரமான நிலத்திற்கு ஏற்றவாறு, மருத்துவ தாவரங்களை எவ்வாறு நடவு செய்வது என்பது பற்றி வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானி குன்ஹிகண்ணன் விளக்கிக் கூறினார். சுமார் 2 மணி நடைபெற்ற இந்த விளக்க நிகழ்ச்சியின் போது, 75 வகையான மருத்துவ தாவரங்கள் மற்றும் அதன் குணங்கள் பற்றி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அறிந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் முதல் மற்றும் 3-வது ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை மாநகராட்சி மற்றும் நகர பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,” இயற்கைச் சூழலை உருவாக்கும் வாய்ப்பின் மூலம் பொதுமக்களுக்கும், இயற்கைக்கும் இடையே ஒரு நல்ல தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நகர்ப் பகுதிகளில் இருக்கும் பல்லுயிர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இந்த ஒரு கி.மீ. இயற்கைச் சூழலை அமைக்கும் பணியின் போது, விதவிதமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் இந்த குளத்தை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அவர்களால் காண முடிகிறது,”என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பினால், தொடர்புக்கு : கலைவாணி - 9585888583