தீபாவளி பண்டிகைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம் : நெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் கோவை மாநகர காவல்துறை

கோவை : நாளை கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி ஆடை உள்ளிட்ட புதிய வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அசம்பாவீதம் ஏதும் நடைபெறாத வண்ணம் கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை : நாளை கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி ஆடை உள்ளிட்ட புதிய வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அசம்பாவீதம் ஏதும் நடைபெறாத வண்ணம் கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் துணிகள், ஆபரணங்கள் போன்ற பொருட்களை வாங்க கோவையின் முக்கிய பகுதிகளான ஒப்பணக்காரவீதி, பெரியகடை, ராஜவீதி, டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் என பல்வேறு பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அதேவேளையில், முக்கியப் பகுதிகளில் கூட்டத்தை கட்டுபடுத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எளிதில் சாலைகளை கடப்பதற்கும் தற்காலிக பேரிகார்டுகள் சாலை ஒரங்களில் அமைக்கப்படுள்ளது. தீபாவளி பாதுகாப்பு பணிகளில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளர். கோவை மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் 50 சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச்செயலில் ஈடுபடுவர்களை எளிதில் பிடிப்பதற்கும் போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

நடைபாதை கடைகள் அகற்றம் :

பொருட்கள் வாங்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் தற்காலிகமாக இடங்கள் அமைத்துள்ளனர். ஒப்பணக்கார வீதி போன்ற பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றை தற்காலிகமாக அப்புறப்படுத்தியுள்ளனர். அதேபோல, நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜேப்படி திருடர்களுக்கு கிடுக்குப்பிடி :

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த அனிதா தேவி, மகளிர் குழு தலைவியாக நாடகமாடியதோடு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில் பெண்கள் கடைவீதிகளில் குவியும் போது, அதை பயன்படுத்தி நகை பணம் ஜேப்படி செய்தும் வந்துள்ளார். இவர் மீது கோவை சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கோவை மாநகர போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆனால், சிக்கவில்லை. 

இந்த நிலையில், தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பதற்காக இவர் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீபாவளி திருட்டுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு படையைச் சேர்ந்த போலீசார் ஒரு சில வாரத்திற்கு முன்பு ராஜாமணி என்ற பெண்ணிடம் கைப்பையிலிருந்து ரூ. 10 ஆயிரம் பணம் திருடும் போது அனிதா தேவியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இப்படி கோவை மாநகர போலீசார் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கண்காணிப்பு பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.

இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், காந்திபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர். பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...