நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘டான் டீ’ தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பனிக் கொடையை வழங்கினார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘டான் டீ’ தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பனிக் கொடையை வழங்கினார்.
குன்னுரில் நடைபெற்ற இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :- தமிழகத்தில் இயங்கி வரும் நலிவுற்ற ‘டான் டீ’ தொழிற்சாலைகள் இன்று அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், லாபகரமாக தொழிற்சாலைகள் இயங்கவிட்டாலும், தமிழக அரசு பல்வேறு மானியங்கள் வழங்கி தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இதில், முதற்கட்டமாக ரூ. 40 கோடி தொழிற்சாலை மேம்படுத்தவும் மற்றும் பணியாட்கள் தொழிலாளர்கள் பணி ஒய்வு தொகையும் வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் ‘டான் டீ’ தொழிலாளர்கள் லாபத்தை ஈட்டும் முயற்சியில் இறங்கினால் மட்டுமே எதிர்வரும் காலத்தில் 20 சதவீத போனஸ் வழங்க முடியும். தேயிலைகளை தரம் உயர்ந்ததாக மாற்ற இயந்திரங்களை புதுப்பிக்கும் பணிக்காக குழு அமைக்கப்பட்டு ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் தொழிலாளர்கள் நலன்கருதி தீபாவளி போனஸ் 8.33 சதவீதத்துடன் 11.67 சதவீதம் கருணை தொகையாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷணன் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
