அமைச்சர்களின் வருகையின் போது கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார குறைபாடு : தனியார் நிறுவன துப்புரவுப் பணி ஊழியர்கள் சஸ்பெண்ட்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் நடத்திய திடீர் சோதனையின் போது, மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணி சரியாக மேற்கொள்ளாமல் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் நடத்திய திடீர் சோதனையின் போது, மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணி சரியாக மேற்கொள்ளாமல் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோவை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு அலுவலர் உமாவிற்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா..? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சுகாதாரதுறை இயக்குனருக்கும்

அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசி மூலம் அறிவுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனையில் சுமார் ஒருமணி நேரம் நடந்த ஆய்விற்கு பின்னர் அமைச்சர்கள் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் 67 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்,2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 17 பேர் பன்றி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசினோம். மேலும், அவர்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக இறப்பு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. ஆகவே, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல, கைகழுவும் பழக்கம் இருந்தால் 80 சதவீத நோய் தொற்று தடுக்கப்படும். ஆகவே, பொதுமக்கள் கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணி சரியில்லாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து, தற்போது தூய்மை பணியின் சூப்பர்வைசர் இரண்டு பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.



சென்னைக்கு இணையாக கோவையை மருத்துவ தலைநகராக மாற்றி வருகின்றோம். மாநில எல்லைகளில் இருப்பதால் கோவை, நீலகிரி பகுதியில் பன்றி காய்ச்சல் தாக்கம் இருக்கின்றது. காய்ச்சல் அவசர சிகிச்சைக்காக சனி, ஞாயிறு விடுமுறை இல்லாமல், தீபாவளி விடுமுறை இல்லாமல் மருத்துவர்கள், ஊழியர்களை பணியாற்ற அறிவுறுத்தி இருக்கின்றோம். காய்ச்சல் காரணமாக வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்வது தொடர்பாக மருத்துவ ஊழியர்கள் மீது புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். மேலும், படுக்கை வசதி இல்லாத தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் காரணமாக வருபவர்களை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றோம். தீபாவளி பண்டிகை நேரத்தில் தீத்தடுப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறும்போது :- நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கடைசி நேரங்களில் முடியாத சூழலில் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால்தான் பாதிப்புகள் அதிகரிக்கிறது. ஆகவே, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...