கோவை : கோவை மாநகரின் மத்தியில் உள்ள முத்தண்ணன் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 91-வது வார தொடர் களப்பணி நடைபெற்றது.

கோவை மாநகரின் மத்தியில் உள்ள குமாரசாமி குளம் என்கிற முத்தண்ணன் குளம் எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இருப்பினும், குளத்தின் அருகாமையிலுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் அதல பாதாளத்தில் உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முக்கிய காரணம் பிளாஸ்டிக் கழிவுகள். இதனை அகற்றும் முயற்சியாக நடைபெற்ற களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்களுடன், Make a Difference குழுவினரும், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், மாநகராட்சியின் துப்பரவு பணியாளர்களும் கலந்துகொண்டனர். இன்று மட்டும் சுமார் 3 டன் அளவுள்ள குப்பைகள் குளத்திலிருந்து அகற்றப்பட்டன. இது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 91வது வார தொடர் களப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.