போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூர் தி.மு.க. நிர்வாகி நிபந்தனையுடன் விடுவிப்பு

கோவை : அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு தேவைபடும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்.

கோவை : அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு தேவைபடும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் சேனாதிபதி. இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் சோமையம்பாளயம் பகுதியில் நிலம் ஒன்றில் வீட்டுமனைகள் பிரித்து டி.டி.சி.பி. அனுமதிபெற்ற நிலங்கள் எனக் கூறி போலியாக ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்தையும் போலியாக போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த நிலையில், இது குறித்த தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கைது செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இது குறித்து தகவலறிந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் சேனாதிபதிக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து, ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை கோவை 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், சேனாதிபதியை கைது செய்ய போதிய முகாந்திரம் இல்லை எனவும், அதனால் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தார். 

மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் போது காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒன்றிய செயலாளர் சேனாதிபதியை நீதிபதி பாலமுருகன் விடுவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...