தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : கோவையில் மட்டும் ரூ. 1,04,718 பறிமுதல்

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட இருந்த கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையில் மட்டும் ரூ. 1,04,718 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட இருந்த கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையில் மட்டும் ரூ. 1,04,718 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் பணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் லட்சக்கணக்கான கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதேபோல, ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆர்.டி.ஒ.சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராமல் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 20 ரூபாய் பணம் சிக்கியது. கடலூர் கேப்பர் மலையில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 647 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் நடைபெற்ற சோதனையில் ரூ. 1,04,718 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து ரூபாய் 44 லட்சம் சிக்கியது. இந்த செயல்பாடுகள் அரசு துறைகளின் நிலைமையை வெளிக்காட்டியுள்ளது.

கோவையில் சோதனை :

நேற்று முன்தினம் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இப்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோவை போக்குவரத்து துறையினர் தனியார் பேருந்துகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் அட்டகாசத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகப் புகார்கள் உள்ளது.



இதனிடையே, கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 1,04,718 பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மக்களிடையே இருக்கும் நம்பகத்தன்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது, கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளரான பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

லஞ்சம் காரணமா..?

கோவையை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, அவிநாசி சாலை திருச்சி சாலை என பல்வேறு முக்கிய சாலைகளில் தொடங்கி மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் வரை தனியார் பேருந்துகள் தங்களின் லாபத்திற்காக அதிவேகமாக வாகனத்தை இயக்கி வருகின்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கோவையில் போட்டி போட்டு வாகனத்தை இயக்கி பல விபத்துக்களை உருவாக்கி பல உயிரிழப்புக்கு காரணமாக உள்ளனர். அதேபோல, இவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, தனியார் பேருந்துகள் சாலையில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் அதிக ஒலிகளை எழுப்பி பொதுமக்களுக்கு பாதிப்புகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனை என்று கூட பார்க்காமல் அந்தப் பகுதி முன்புதான் அதிக ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இது இருதய நோயாளிகள் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்குப் பெரிதும் வேதனையை ஏற்படுத்துகிறது. இவர்களின் செயல்பாடுகளால் கோவையில் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது.

ஊடகங்களும் இந்த பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசத்தை எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.ஆனால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதற்கு முழு பொறுப்பாளர்களான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த தனியார் பேருந்துகளை கண்டிப்பதில்லை. அப்படி கண்டிப்பதாக இருந்தாலும் அவை பெயரளவுக்கு மட்டுமே இருக்கிறது. இதனால், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகளை கண்டாலே முகம் சுளிக்கின்றனர். 

அதேபோல, தனியார் பேருந்துகளுக்கு பொதுமக்களின் உயிரை எடுக்கும் அளவிற்கு ஏன் சுதந்திரம் கொடுத்துள்ளனர்..?. ஏன் அதிக ஒலி எழுப்பும் தடைசெய்யப்பட்ட ஹாரன்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதில்லை..? என்ற பல சந்தேகங்களும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனைகளில் தீர்ந்தாற்போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அபராதமும்...வேதனையும்...

இது குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விக்னேஷ் கூறியதாவது :- கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் ஏற்படுத்துகின்றது. அதேபோல, இவர்கள் ஏற்படுத்தும் சாலை விபத்துகள் மற்றும் உயிர்ப்பலிகள் இவர்களை தண்டனைக்கு உள்ளாக்குவது இல்லை. அதிகபட்சமாக அபராதங்களைக் கட்டி தங்களது பண பலத்தால் வெளியில் வந்து விடுகின்றனர்.



இவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய போக்குவரத்து துறையும் இவர்களை கட்டுப்படுத்துவது கிடையாது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தினால் சட்டத்திலுள்ள தண்டனைகள் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களின் உரிமங்கள் கூட கேன்சல் ஆவதில்லை. இதற்கு காரணம் முழுக்க முழுக்க லஞ்சம், ஊழல் தான் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இவர்களின் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என நாங்கள் நினைக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கழிவறை வரை லஞ்ச பணம் :

மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நுழைந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை அலுவலகத்தில் இருந்த கோப்புகளுக்கு இடையில் மறைத்து வைத்தனர். சில ஊழியர்கள் லஞ்சப்பணத்தை கழிவறை உள்பட பல்வேறு இடங்களில் வீசினார்கள். இதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைத்து வைக்கபட்ட பணத்தை கைப்பற்றினர். அதேபோல, கழிவறையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் நனைந்திருந்தன. இவற்றை உலர வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இதேபோல, கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட பணம் அலுவலகத்தில் ஆங்காங்கே வீசப்பட்ட பணம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 718 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதில், 70 ஆயிரம் ரூபாய் கோப்புகளிலும், கழிவறையிலும், அலுவலகத்தின் இதர பகுதிகளிலும் இருந்தும், மீதி 23 ஆயிரத்து 718 ரூபாய் ஊழியர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

துறையின் தலைவரே பொறுப்பு : 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுவதாவது ;- கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் பணியில் இருந்தவர்கள் யார்..? யார்..?, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதற்கான ஆதாரங்களை காட்டி அந்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இல்லை எனில் கணக்கில் வராத பணம் என்று பதிவு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சோதனையின்போது கேட்பாரற்று அலுவலக வரண்டாவில் வீசப்பட்ட பணத்துக்கும், கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்திற்கும் அந்தப் பிரிவின் தலைவர் தான் பொறுப்பாவார். ஆனால், கழிவறைகள் வீசப்பட்ட பணத்துக்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றார். 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால், பொதுமக்கள் மத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகளைக் கண்டிக்காமல் செயல்படும் தனியாரின் விருப்பத்திற்காகப் பணிபுரிவதற்கான பணம்தான் இந்த லஞ்சப் பணமா..? என்று பொதுமக்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...