சமமான தீபாவளி போனஸை வழங்க வலியுறுத்தி பிரிக்கால் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிக்கால் ஊழியர்களின் போராட்டம் 75-வது நாளை எட்டியுள்ள நிலையில், சமமான தீபாவளி போனஸை வழங்கக் கோரி மேலும் ஒருபகுதி போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிக்கால் ஊழியர்களின் போராட்டம் 75-வது நாளை எட்டியுள்ள நிலையில், சமமான தீபாவளி போனஸை வழங்கக் கோரி மேலும் ஒருபகுதி போராட்டம் நடத்தப்பட்டது. 

பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 75-வது நாளை எட்டியுள்ளது.



பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கமானது, அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தில் (AICCTU) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சி.பி.ஐ.(எம்.எல்) கூட்டமைப்பிலும் இணைந்துள்ளது. 

இந்த விவகாரம் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தொழிலாளர் துறை, பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான தீபாவளி போனஸை வழங்க வலியுறுத்தி பெரியநாயக்கன் பாளையத்தில் இருக்கும் யுனிட்டின் முன்பு சுமார் 2 மணி நேரம் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தொழிலாளர் சங்கத்தை அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை விட தொழிலாளர் சங்கத்தில் இருப்பவர்களுக்குக் குறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.



இது குறித்து சி.பி.ஐ. (எம்.எல்.) வேல்முருகன் கூறுகையில், " தொழிலாளர் சங்கத்தை உடைக்க நிர்வாகம் முயற்சி செய்கிறது. பிரிக்கால் தொழிலாளர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு சட்டவிதிகளை காரணம் காட்டி 20% சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், சங்கத்தை அல்லாத ஊழியர்களுக்கு ரூ.56,000-க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்களிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. எனவே, இந்தப் பிரச்சனையை தீர்க்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார். 

பிரிக்கால் தொழிற்சாலைக்கான தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு அரசு, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுடன் சுமூகமான உறவை கடைபிடிக்க நிர்வாகம் விரும்புகிறது. மேலும், தொழிற்சாலைகளின் விதிகளின்படி, போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் கடந்த அக்டோபர் 17-ம் தேதி 20% போனஸ் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்காத சில தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் முன்தொகை கேட்டு பெற்றுக் கொண்டனர். இதுவரை 150 தொழிலாளர்கள் முன்பணம் பெற்றுள்ளனர், எனக் கூறினார். 



மேற்கண்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பெரியநாயக்கன் பாளையம் யுனிட் முன்பு மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...