விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் கரைந்து விட்டதா என பார்க்க நொய்யல் ஆற்றில் இறங்கிய பள்ளி மாணவன் பலி

கோவை : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைந்து விட்டனவா..? என குளத்தில் இறங்கி பார்த்த மூன்று சிறுவர்களில் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைந்து விட்டனவா..? என குளத்தில் இறங்கி பார்த்த மூன்று சிறுவர்களில் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த உஷாராணி என்பவருக்கு குணசேகரன் (13) மற்றும் ரஞ்சித்(11) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குணசேகன் செலக்கரச்சலில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது சகோதரர் ரஞ்சித் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது நண்பர் திருமலைவாசனுடன் இன்று நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்கள் இதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளைக் கரைப்பதற்காக இந்த குளத்திற்கு வந்துள்ளனர். தாங்கள் கரைத்துவிட்டுச் சென்ற சிலைகள் கரைந்து விட்டதா என்பதைப் பார்ப்பதற்காக மூவரும் ஆற்றில் இறங்கிப் பார்த்துள்ளனர்.

மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், ஆற்றில் ஆழமான பகுதிக்குச்சென்ற அவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அப்போது, அங்கு தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது, திருமலைவாசன், ரஞ்சித் ஆகியோரைக் காப்பாற்றியுள்ளனர். குணசேகனை மீட்கும் போது முடியாமல் போனதால், அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். 

அதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் சூலூர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து 5 மணிநேரம் தேடியும் உடல் கிடைக்காததைத் தொடர்ந்து, சூலூர் மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம் ஆலோசனையின்பேரில் மீன்பிடி மீனவர்கள் ஆற்றின் உள்ளே அதிக ஆழம்வரை சென்று உள்ளே இறந்து கிடந்த குணசேகரனின் உடலை மீட்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து சிங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...