நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக உதகை கமர்சியல் சாலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண்பதற்காக தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை இருக்கும் போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். எனவே, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உதகை கமர்சியல் சாலையில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் இருந்து பல்வேறு இடங்களில் உன்னிப்பாக கவனிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன், சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இந்தக் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.