நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விபத்துக்களில் சிக்குவதைத் தடுக்கும் வகையில், சாலையின் இருபுறங்களிலும் உள்ள புதர்களை மாவட்ட காவல்துறையினர் அகற்றினர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விபத்துக்களில் சிக்குவதைத் தடுக்கும் வகையில், சாலையின் இருபுறங்களிலும் உள்ள புதர்களை மாவட்ட காவல்துறையினர் அகற்றினர்.

உதகை மைசூர் சாலை, காட்டேரி முதல் பர்லியார் வரையில் உள்ள சாலையில் இருபுறங்களிலும் உள்ள புதர்களை அகற்றும் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, குன்னூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், ஆய்வாளர்கள் சிறப்பு துணை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வளைந்து நெலிந்து வரும் சாலையில் பயணிக்கும் போது, சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர் செடிகளால் வாகனங்களை வளைவில் திருப்பும் போது எதிரே உள்ள சாலை தெரியாமல் போய்விடுகிறது. இதனால், விபத்துக்கள் அடிக்கடி நேரிடுவதைத் தவிர்க்க இந்தப் பணிகளை மேற்கொள்வதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் இந்தப் பணி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாராட்டையும் பெற்றது.