கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, அதற்கு நிதி ஒதுக்காமல் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது : கோவையில் தம்பிதுரை பேட்டி

கோவை : கிராமத்தை மட்டும் தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, அதற்கு நிதி ஒதுக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கோவை : கிராமத்தை மட்டும் தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, அதற்கு நிதி ஒதுக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- மத்திய அமைச்சர்கள் தமிழக அரசின் திட்டங்களை தங்களின் திட்டங்கள் போல சொல்கின்றனர். அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவது மாநில அரசுதான். தமிழக வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கின்றது. அதன்மூலம் திட்டங்கள் தமிழகத்திற்கு செயல்படுத்தப்படுகின்றது. மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ. 18 ஆயிரம் கோடி தொகை நிலுவையில் உள்ளது. ஜெயல்லிதா உயிருடன் இருந்த போது அந்த தொகையை வழங்கும்படி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். தற்போது வரை அந்த தொகை வழங்கப்படவில்லை. தமிழக திட்டங்கள் செயல்படுத்த அந்த தொகையை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று தரவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, அதற்கு இதுவரை பணம் எதுவும் தரவில்லை. 

கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு எந்தநிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஆனால், எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பேசுகின்றார்கள். இது தேவையற்ற பழி. மேலும், ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுத்தால் மற்ற கிராமங்கள் என்ன ஆவது..? மத்திய அரசு திட்டத்தை அறிவித்து விட்டால் மட்டும் போதாது. 

ஒரு கிராமத்தை மட்டும் தத்து எடுத்துவிட்டால் மற்ற கிராமங்களுக்கு ஓட்டு கேட்க செல்ல முடியாது. அந்த கிராமத்திற்குதானே எல்லாம் செய்தீர்கள், அங்கு சென்று ஓட்டு கேளுங்கள் என கிராம மக்கள் சொல்வார்கள். இதேபோன்ற, தர்மசங்கடத்தை மத்தியரசு எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றனர். 

தமிழக மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரியில் மத்திய அரசு செயல்படுகின்றது. அதனால்தான், திராவிட கட்சிகள் மாநில உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன, இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...