கோவை : ஆனைகட்டி அருகே வனத்துறை அதிவிரைவுப் படையினர் மற்றும் பழங்குடியின குழந்தைகள் இணைந்து ‘பசுமை தீபாவளி’யை கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூமனூர், ஜம்புகண்டி மற்றும் ஆனைகட்டி மலைக் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டின்கிள் சேனா கேந்திரா அமைப்பினர் சந்தித்து இனிப்புகளை வழங்கினர். மேலும், அவர்களுக்கு சிறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அப்போது, தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது எவ்வாறு என விளக்கப்பட்டது.
மேலும், சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் வகையில், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும் என அறிவுறித்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அதிவிரைவுப் படை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் கலந்து கொண்டனர்.

அண்மையில் யானை தாக்கி சக வன ஊழியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறை ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று மன அமைதியை அளிக்கும் என நம்புவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.