சபரிமலை கோயிலில் தரிசனம்செய்ய பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பெண்களை தடைசெய்யும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய மாவோஸ்ட்டுகளின் போஸ்டர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையிலுள்ள பாலாக்காடு மாவட்டம் மன்னார்காட்டில் இருந்து அட்டப்பாடி செல்லும் வழியில் ஆனைமுள் என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர்.

அதில், சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்க வேண்டும் எனவும், பெண்களை தடை செய்யும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆண்கள் ஆதிக்கத்தை போராடி வெல்ல வேண்டும், பெண்கள் விமோசனம் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் ஆனைமுள் அட்டப்பாடி உள்ளிட்ட 5 இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்த கேரள சிறப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடைய கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யபப்ட்ட நிலையில், தற்போது வனப்பகுதியில் ஒட்டப்பட்டபோஸ்டர்களால் அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த இருவாரங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினரை துப்பாக்கிமுனையில் மிரட்டி செல்போன் சார்ஜர், பவர்பேங்க், பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தமிழக கேரள எல்லையிலுள்ள நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளியிலிருந்து அட்டப்பாடி, மன்னார்காடு பகுதி அருகே உள்ளதால் இப்பகுதிக்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவி வரக்கூடும். எனவே, தமிழக கேரள எல்லைப்பதியான மஞ்சூர், முள்ளி போன்ற பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.