கோவையில் தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம்

கோவை: தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் தரம் குறித்து கோவையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் 5 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை: தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் தரம் குறித்து கோவையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் 5 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ், காரம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஸ்வீட்ஸ், காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா..?, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா..?, பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா..? உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் 5 குழுக்கள் அமைத்து இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் பெரிய, சிறிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 155 சிறிய கடைகளும், 49 பெரிய நிறுவனங்களும் பார்வையிடப்பட்டு, அதிக கலர் சேர்த்த 68.5 கிலோ இனிப்பும், 13 கிலோ லேபிள் இல்லாத பொருளும், 35 லிட்டர் பழைய எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 9 கடைகளுக்கு ஆய்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடை உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். இனிப்பு, காரம் செய்யப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இனிப்புகளுக்கு குறைந்த அளவுகளிலே கலர் பயன்படுத்த வேண்டும். காரவகைகளுக்கு கலர் பயன்படுத்தக் கூடாது. உணவுப்பொருள் தயாரிக்கும் பணியாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் போன்ற கொள்கைகளை இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:- இனிப்பு, கார வகைகள் தரமானதாக செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சமையல் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்களை திறந்த நிலையில் வைக்கக் கூடாது. 

இனிப்பு, காரம் தயாரித்த பாத்திரங்களைச் சுத்தமாக கழுவ வேண்டும். தயாரிப்பவர்கள், பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபடும் நபர்கள் கைகள், தலையில் உறைகளை அணிய வேண்டும். பேக்கிங்கில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு எண் உள்ளிட்டவை இருக்க வேண்டும். கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பு குறித்துக் கண்காணிக்க 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...