கோவை : வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, முதலீட்டு லாபத்தை மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கோவை பிரபல ஆலை அதிபர் உள்பட இருவருக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் டைபர்வால் மற்றும் மோகன்லால் டைபர்வால் ஆகியோர் கோவை காளப்பட்டி பகுதியில் 'கங்கோத்ரி டெக்ஸ்டைல்' என்ற பெயரில் ஆலை நடத்தி வந்தனர். அவ்விருவரும் கடந்த 2012 மற்றும் 13-ம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்தபோது, சுமார் ரூ. 22 கோடி முதலீட்டு லாபத்தை மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் வருமான வரி சட்டத்தின் கீழ் 7 கோடியே 30 லட்சத்து 48 ஆயிரத்து 153 ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது.
ஆனால், அபராதத்தை அவர்கள் கட்ட தவறியதால் இருவர் மீதும் முதலீட்டு லாபத்தை மறைத்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோவை குற்றவியல் நீதித்துறை நடுவன் நீதிமன்ற நீதிபதி வேலுசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் 3 மாத சிறை தண்டனை விதித்தும், நிறுவனத்திற்கு ரூ. 10,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.