ரோட்டரி கிளப் சார்பில் கோவை ரயில்நிலையத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கோவை : ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.


கோவை : ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.



ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கும் விழாவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் யு. சுப்பாராவ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுனர் ரோட்டேரியன் எ. வி. பதி முன்னிலை வகித்தார். 

இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் தலைவர் ரோட்டேரியன் டாக்டர். பி. கிருஷ்ணானந்தன் கூறும்போது :- மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியை ரோட்டரி சங்கம் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இது 8 அடி அகலம், 8 அடி நீளம் என்ற அளவில் அமைக்கப்பட்ட அறையாகும். இதில், ஒரே நேரத்தில் 4 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டலாம். இந்த சேவையானது மிக விரையில் கோவையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும். இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

மேலும், கோவை ரயில் நிலையங்களின் தூய்மையைப் பாதுகாக்க மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க 20 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் எங்களுடன் சேர்ந்து ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும். ரோட்டரி கிளப்புகள் சார்பில் நமது பாரத பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் முழு வெற்றியடைய பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது குறித்து பொதுமக்களிடம் அவ்வப்போது பல விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். மேலும், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கோவை - திருச்சி ரோடு பட்டணத்தில் உள்ள ரோட்டோரியன் ஆனந்தனின் நிறுவனத்தில் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன, இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் எ. விஜுவின், கோவை ரயில் நிலைய தலைமை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு, நிலைய இயக்குநர் சதீஷ், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் செயலாளர் ரோட்டேரியன் சி.ஆர்.வி. ஸ்ரீநாத், சேர்மன் கம்யூனிட்டி சர்வீஸ் ரோட்டேரியன் டாக்டர். அர்சத், ஜி.ஜி.ஆர். ரோட்டேரியன் பி. எஸ். பிரகாஷ் மற்றும் தியாகராஜன், முன்னாள் தலைவர் ரோட்டேரியன் எ. காட்வின் மரிய விசுவாசம், துணை ஆளுநர் ரோட்டேரியன் சி.ஜி. குமார், மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...