தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவித்துள்ளது.

பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்தத் தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசும் மனுதாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியது. 

அதன்பின்னர், நேற்று முன்தினம் புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனக் கூறியிருந்தது. இந்த நேரத்தில் மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருந்தது. 

அதன்படி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அதாவது, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும், எந்தெந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...