நீலகிரி : உதகை படகு இல்லம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லம் செல்லும் சாலை மைசூர், கூடலூர் மற்றும் அருகில் உள்ள காந்தல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காலை நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. இதில், படகு இல்லத்திற்குள் நுழைந்த லாரி அங்கிருந்த மரங்களில் மோதி பாதியில் நின்றது. இதனால், இந்த விபத்தில் லேசான காயங்களுடன் லாரியில் சென்றவர்கள் உயிர்தப்பினர்.

இன்னும் சற்று தள்ளி லாரி சரிந்து இருந்தால், படகு இல்லத்திற்கு சொந்தமான நீரில் மூழ்கி ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்தவர்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து உதகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.