பெட்ரோல் திருடியதை கண்டித்த நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் பெட்ரோல் திருடியதைக் கண்டித்த நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர் : திருப்பூரில் பெட்ரோல் திருடியதைக் கண்டித்த நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் சுடுகாட்டு தோட்டத்தில் குடியிருந்து வரும் ரமேஷ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர் மணியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. ரமேஷ் அந்தப் பகுதியில் எலக்ட்ரிஷியனாக வேலை பாரத்து வந்த நிலையில், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடிய மணியைக் கண்டித்துள்ளார். பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மணி ரமேஷை தீர்த்துக் கட்ட முடிவெடுத்துள்ளார்.



அதன்படி, ரமேஷை மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து மது போதையில் இருந்த ரமேஷை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதின், குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...