பிரபல யானை வேட்டைக்காரர் கைது : மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பிரபல யானை வேட்டைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பிரபல யானை வேட்டைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, போளுவாம்பட்டி மற்றும் கோத்தகிரி வனப்பகுதிகளில் தந்ததிற்காக ஆண் காட்டு யானைகள் சுட்டு வேட்டையாடப்படுகின்றன. இந்த யானை வேட்டை தொடர்பாக பிரபல யானை வேட்டைகாரனான குபேந்திரன் (47) மற்றும் அவரது கூட்டாளியான சிங்கம் (46) ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கேரள வனத்துறையினரும் இவர்களை தேடி வரும் நிலையில், கோத்தகிரி வனத்துறையினர் கேரளாவில் பதுங்கியிருந்த குபேந்திரன் மற்றும் சிங்கம் ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இவ்வழக்கில் பிணையாணை பெற்ற நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு யானையை சுட்டுக்கொன்ற வழக்கின் கீழ் சிறுமுகை வனத்துறையினர் மீண்டும் இவர்களை கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிமன்ற உத்திரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 



கைது செய்யப்பட்ட குபேந்திரன் மற்றும் சிங்கம் குறித்து வனத்துறையினர் கூறும் போது, “இவர்கள் ஆண் யானையினை மட்டுமே தந்ததிற்காக சுட்டுக்கொன்று வேட்டையாடுவார்கள். துப்பாக்கிகளை வனப்பகுதியில் ஆங்காங்கே புதைத்து மறைத்து வைத்து விட்டு யானைகளை கொன்று அதன் தந்தங்களை கேரளாவில் உள்ள வியாபாரி பாபு ஜோஸ் என்பவரிடம் கொடுத்து விற்றுவிடுவார்கள். ஒரே துப்பாக்கி குண்டில் யானையினை வீழ்த்தக்கூடிய குபேரனை தமிழகம் மற்றும் கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்,” என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...