திருப்பூர் : பொதுத்துறை வங்கிகளில் ஒரு கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் " PSB loans in 59 minutes portal " இணையதள சேவை பற்றிய விளக்க நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுத்துறை வங்கிகளில் ஒரு கோடி வரையிலான கடன்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் , " PSB loans in 59 minutes portal " இணையதள சேவையினை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடில்லி விஞ்ஞான்பவனில் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் நேரலையாக பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரலை நிகழ்ச்சி துவங்கும் முன்பாக மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் பேசும்போது :- நாட்டில் சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அவர்களுக்கு எளிதான கடன் வசதிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னோடி வங்களில் கடன் விரைவாக கிடைக்கும் வகையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இதனை பயன்படுத்தி சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைய வேண்டும், எனக் கூறினார்