சிறு குறு நடுத்தர நிறுவன தயாரிப்புகளின் கொள்முதல் 25 சதவீதமாக உயர்வு : கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கோவை : சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தயாரிப்புகளின் கொள்முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும்என கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கோவை : சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து  பெறப்படும் தயாரிப்புகளின் கொள்முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும்என கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் 12 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியை கோவை தொழில் துறையினர் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு காணொலி காட்சிக்கு மாநகராட்சி கலை அரஙகில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



நிகழ்ச்சிக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து தயாரிப்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் அளவு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் நடத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து 3 சதவீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. வங்கியில் கடன் வாங்குவதற்கு உத்திரவாத ஆவணங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்கும் வங்கிகள் மீது புகார்கள் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், 100  கிளஸ்டர்களில் இன்று பிரதமர் அறிவித்துள்ள அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை பிரதமரே கண்காணிக்கிறார். நாடு முழுவதும் உள்ள 100 கிளஸ்டர் மையங்களில் தமிழகத்தில் கோவை, வேலூர், திருவள்ளுர், திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு ஆகிய பகுதிகள் இருக்கிறது. இதில் எது கிளஸ்டர் மையம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். ஜாப்ஒர்க்  செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொழில் முனைவோர் வைத்திருக்கின்றனர். இதில், ஜி.எஸ்.டி கவுன்சில் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இந்த கோரிக்கையை தானும், தமிழக அமைச்சர்களுக்கு வைக்கிறேன்.  தமிழக அமைச்சர்களும் இந்த கோரிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சிலில் பேசவேண்டும். நானும் பேசுகின்றேன், என்றார்.



இதனை தொடர்ந்து,  மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மக்களவை துணை சபாநாயகர் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் மாநில அரசுக்கு வருவதில்லை என தெரிவித்து இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது :-தம்பிதுரை எந்த திட்டங்கள் தமிழகத்திற்கு வரவில்லை என  பேசினார் என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், முதலமைச்சர் மூலமாக வந்த கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேற்றப்பட்டது. கேட்கப்பட்ட நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அதற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். தம்பிதுரை எந்த திட்டங்கள் வரவில்லை என பேசுகின்றார் என்பது தெரியவில்லை என்பதால், அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ரபேல் விமான ஊழல் குறித்து கேள்விக்கு நிச்சயம் பதில் அளிப்பேன். எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் விமான பிரச்சினை குறித்து ஒவ்வொரு நாளும்  ஓவ்வொன்றாக பேசி வருகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் குறித்த கேள்விகள் தவிர மற்ற கேள்விகளுக்கு இப்போது பதில் அளிக்கமுடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...