உள்ளூர் நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான டெண்டர் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான டெண்டர் விட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக தடை விதித்துள்ளது.

மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான டெண்டர் விட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக தடை விதித்துள்ளது. 

மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் இருக்கும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எஸ். அருண் நிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும், உள்ளூர் மீன்பிடித் தொழிலால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், மீன்பிடிப்பதற்கான டெண்டரில் முறையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் டி. ராஜா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு உத்தரவு வரும் வரை உள்ளூர் நீர்நிலைகளில் மீன்பிடிப்பதற்கான டெண்டர் விடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே, கோவை மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலைகளில் டெண்டர் முறையில் மீன்பிடிக்கும் மீனவர்களால் சேதம் ஏற்படுத்தும் சம்பவங்கள் பிற மாவட்டங்களில் தொடர்கிறது. இதனால், நீர்நிலைகளின் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன், குளத்தின் நீரும் மாசடைகிறது.

"ஒருமுறை நீர்வரத்து தடைப்படும் போது, மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்குகிறது. குளத்தின் கொள்ளளவுக்கு ஏற்றாற் போல் மீன்களின் எண்ணிக்கை உயரும் போது, அவை மடிகின்றன. குறிப்பாக, சூலூர், வாலாங்குளங்களில் கொத்து கொத்தாக மீன்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது," என்கிறார் சமூக ஆர்வலர்

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்றும், யாரேனும் தடையை மீறி மீன்பிடிக்கின்றனரா..? என அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...