Exclusive: தீபாவளியை முன்னிட்டு கோவையிலிருந்து கர்நாடகாவிற்கு 82 பேருந்துகள் இயக்கம்

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து பெங்களூருக்கு 27 பேருந்துகளும், மைசூருக்கு 55 பேருந்துகளும் இயக்கப்படும் என கோவையில் உள்ள கர்நாடகப் போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து பெங்களூருக்கு 27 பேருந்துகளும், மைசூருக்கு 55 பேருந்துகளும் இயக்கப்படும் என கோவையில் உள்ள கர்நாடகப் போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளிமாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால், ஏற்படும் கூட்ட நெரிலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை - பெங்களூர் இடையே கூடுதலாக 15 பேருந்துகளும், கோவை - மைசூர் இடையே 15 பேருந்துகளும் வரும் திங்கள் முதல் இயக்கப்படுகின்றன. கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நாட்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து கோவையில் உள்ள கர்நாடக போக்குவரத்து கழக மேலாளர் ரவி கூறுகையில், "இதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. மேலும், பேருந்துகளின் எண்ணிக்கை பொதுமக்களின் கூட்டத்தைப் பொருத்து அதிகரிக்கப்படும். முன்பதிவு இல்லாத பேருந்துகளும் இயக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...