5 நாளாக நடத்தி வந்த சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

கோவை : தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களாக சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை : தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களாக சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.9000 கொடுத்திட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கக் கோரியும் மற்றும் விருப்ப பணி மாறுதல் கோருபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாற்ற உத்தரவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

5-வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா இன்று மீண்டும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தினார். மேலும், சத்துணவு ஊழியர்கள் கூட்டமைப்பினருக்கு ரூ.949.76 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சத்துணவு ஊழியர்களுக்கு 16 வகையான சிறப்பு சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டிலேயே தமிழகத்தின்தான் சத்துணவு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சரோஜா சுட்டிக் காட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட சத்துணவு ஊழியர்களின் சங்கத்தின் தலைவர் எம். இன்னிசைமுத்து சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சவார்த்தையின் போது எங்களது கோரிக்கைகளுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார். 3 கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே முடிவு கிடைத்துள்ளது. 

கோவையில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தப்பட்டு வந்த போது, குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விடுமாறு அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், சில தனியார் பள்ளிகள் மதிய உணவிற்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...