நீலகிரி : குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால், தொழிற்சாலைகள் தீபாவளிக்காக வழங்கும் முன்பணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீலகிரி : குன்னுார் 'டீசர்வ்' தேயிலை ஏலத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால், தொழிற்சாலைகள் தீபாவளிக்காக வழங்கும் முன்பணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைதுாள், குன்னுார் 'டீசர்வ்' ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற 42-வது ஏலத்தில் 'இலைரகம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கிலோவும், 'டஸ்ட்' ரகம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோவும் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம் கிலோ விற்பனையானது. கடந்த 41-வது ஏலத்தில் ரூ. 80.19 சராசரி விலை கிடைத்த நிலையில், நடப்பு வாரம், ரூ. 78.98 கிடைத்தது. விலையில் ரூ. 1.21 விலை குறைந்தது. பிதர்காடு தொழிற்சாலையைத் தவிர, மற்ற அனைத்து தொழிற்சாலைகளின் இலை, டஸ்ட்ரக தேயிலைதுாள், 100 சதவீதம் விற்பனையானது.

குந்தா, பந்தலுார் தொழிற்சாலைகளின் இலைரகமும், பிக்கட்டி, பந்தலுார் தொழிற்சாலையின் டஸ்ட்ரகமும் அதிகபட்சம் ஏலத்திற்கு வந்தது. மொத்தம் 2 கோடியே 21 லட்சத்து 76 ஆயிரத்து 170 ரூபாய்க்கு விற்பனையாகின. கடந்த வாரத்தை விட மொத்த வருமானத்தில் 43 லட்சத்து 62 ஆயிரத்து 146 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக, தீபாவளிக்காக தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.