திருப்பூர் : உடுமலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் வழங்கினார்.

உடுமலையில் தமிழக அரசின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருவாய்துறையினர் கணக்கெடுப்பின்படி, நலிவடைந்த மற்றும் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டா மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட 9,56,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் 305 பயனாளிகளுக்கு கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் பேசுகையில், "பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி தீபாவளிக்கும் இலவசவேட்டி சேலை வழங்க உத்தரவிட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா," என புகழாரம் சூட்டினார்.