வெஸ்டன்காட்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கோவை : திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் வெஸ்டன்காட்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில் இன்று டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை : திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் வெஸ்டன்காட்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில் இன்று டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

பள்ளித் தலைவர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் அழகு ராஜலட்சுமி கலந்து கொண்டார். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த அனைத்து தகவல்களையும், மருத்துவர் அழகு ராஜலட்சுமி மாணாக்கரிடம் விளக்கிக் கூறினார். மேலும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகளையும், தவிர்க்கும் வழிமுறைகளையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மாணாக்கர் நோய்கள் இன்றி சுகாதாரமாக வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவர் அழகு ராஜலட்சுமி பரிசளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இந்த சுகாதார துறை அதிகாரிகளும் முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...