உதகையில் பாரம்பரியமிக்க மெகாசைஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட பாரம்பரியமிக்க மெகாசைஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட பாரம்பரியமிக்க மெகாசைஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. 



கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது பலவகையான கேக் தான். பிளாக் பாரஸ்ட், வென்னிலா, சாக்லேட், பிளம், தெராமிஸி என பல வகையான கேக்குகள் அன்றாட நாம் அறிவோம். 

வேகமாக மாறி வரும் இன்றைய உலகில் நேரமின்மை காரணமாக கேக் தயாரிப்பதை மறந்து கடைகளில் வாங்கி சென்றாலும் இந்த சுவையான கிறிஸ்மஸ் கேக் பின்னணியில் பல சுவையான தகவல்களும் உள்ளன. 

17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான பணிகள் ஒரிரு மாதங்களுக்கு முன்பாகவே துவங்கி விடுவதாகவும், கேக் கலவை செய்வது அறுவடை காலத்தை குறிக்கின்ற வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் பெரிய சம்பிரதாயமாக கருதப்பட்டு வந்ததாம். இத்தகைய வளமான சம்பிரதாயத்தை இன்றைய காலகட்டத்தில் எடுத்துரைக்கும் வகையில் உதகையில் உள்ள தனியார் ஜெம்பார்க் வளாகத்தில் இந்த கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. 



இந்த கலவையின் போது முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரிச்சைபழம் என பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரிரு தினங்கள் வரை பல்வேறு கட்டங்களில் பல்வேறு நறுமணப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இந்த கலவை ஊறி நறுமணமும், சுவையும் சேர அவ்வப்போது கிளரப்படுவதாகவும் இந்த கலவை கெட்டு போகாமல் இருக்க உயர்வகை மதுவகைகள் பயன்படுவதாகவும் இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த மதுவகைகள் கேக் கலவையில் கலப்பதன் மூலம் புதிதான நறுமணம் வீசுவதோடு டிசம்பர்மாத குளிருக்கு ஏற்றதாக அமையும் என்று உணவு பிரிவு மேலாளர் பி.ஆர். பிரதீப் குமார் தலைமை உணவு நிபுணர் சுரேந்திரன், மேலாளர் இஸ்மாயில்கான் ஆகியோர் கூறுகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...