மேட்டுப்பாளையம் அருகே குண்டும் குழியுமாக காணப்படும் மலைக்கிராம சாலைகள் : பழங்குடியின மக்கள் அவதி

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமமான வெள்ளியங்காடு முதல் பில்லூர் அணை வரை வனம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ள 32 கிலோமீட்டர் சாலை மின் வாரியத்திற்கு சொந்தமானது.

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமமான வெள்ளியங்காடு முதல் பில்லூர் அணை வரை வனம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ள 32 கிலோமீட்டர் சாலை மின் வாரியத்திற்கு சொந்தமானது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பில்லூர், கெத்தை, குந்தா, பரளி போன்ற பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த அணைகள் கட்டப்படுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் இவ்வனப்பகுதியில் மின்சார வாரியத்தின் சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.

இதன் பிறகு தற்போது வரை இந்த சாலை ஒரு முறை கூட புதிதாக போடப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிரு முறை மட்டுமே இச்சாலையில் ஏற்பட்ட குழிகள் வெறும் மண் கொண்டு மூடப்பட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக சேதமடைந்து வாகனங்கள் ஏதும் கடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது.



வெள்ளியங்காடு முதல் பில்லூர் அணை வரை உள்ள இப்பகுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

மலை மீதுள்ள இக்கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இவர்கள் இச்சாலை வழியே தான் மருத்துவம், கல்வி, வேலை, மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்க என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சமதளப்பகுதியான வெள்ளியங்காடு வந்தாக வேண்டும். 

இம்மலை கிராமங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளும் மோசமான இந்த சாலையின் காரணமாக பழுதடைந்து நடு வழியில் நின்று விடுகின்றன.

இதனால் சரியான போக்குவரத்து வசதியின்றி மலைக்கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

சேதமடைந்த ஆபத்தான இந்த மலைச்சாலையில் கட்டுமான பொருட்களை கொண்டு வருவதில் உள்ள பிரச்சனைகளால் தங்களது கிராமங்களில் அரசு சார்பில் பழங்குடியின மக்களுக்கான தொகுப்பு வீடுகளின் கட்டுமான பணிகளும் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதாகவும், தங்களது குறைகளை களைய யாரும் முன்வருவதில்லை என்றும் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையின் அவல நிலை குறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, "சாலையை சீரமைக்க எங்களிடம் போதிய நிதி வசதியில்லை என்பதால் இச்சாலையினை தங்களது கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நெடுஞ்சாலை துறையினருக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதிலில்லை." என பதிலளித்தனர்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் ஐம்பது ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த சாலை வழியே தான் கோவையில் இருந்து நீலகிரி செல்ல மூன்றாவது வழித்தடம் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...