கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதில் வெள்ளலூரை சேர்ந்த நாகராஜ் என்ற 62 வயது முதியவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த சுங்கம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல காய்ச்சல் காரணமாக நேற்றுமுன் தினம் அனுமதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த நாகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேரும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.