கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 55 கோடி மதிப்பிலான நிலத்தை விற்க முயன்ற 5 பேர் கைது

கோவை : கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 55 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்றதாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 55 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்றதாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70), இவரும் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், ரத்தினம், லட்சுமி, ரமாபிரபா, மற்றும் சாந்தி ஆகியோர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 5.48 ஏக்கர் நிலத்தை சாந்தலிங்கம் (66), உள்பட சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்கிறார்கள். 

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 



அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பழனிச்சாமி உள்பட 7 பேருக்கு சொந்தமான ரூபாய் 55 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அதில் தங்கள் பெயர்களைச் சேர்த்து விற்க முயன்றது தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தலிங்கம் (66), ராமசுப்பிரமணியம் (73), ரஜினிகாந்த் (45), முருகேசன் (57), மதியழகன்(65) உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர.

இந்த வழக்கு தொடர்பாக அனுஷா ரஜினிகாந்த், பவன்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், "இந்த மோசடி வழக்கில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என்றனர்

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...