திருப்பூர்: 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடனடியாக கைது செய்ய கோரி திருப்பூரில் பொது மக்கள் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடனடியாக கைது செய்ய கோரி திருப்பூரில் பொது மக்கள் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தீபாவளி பண்டிகையின் காரணமாக பனியன் நிறுவனத்ததில் பணியாற்றும் தாய் இரவு வேலைக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்புவது வழக்கம்.
அதே போல பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது தனது மனைவி வருவார் என கதவை திறந்து வைத்து விட்டு உறங்கியுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் 4 வயது குழந்தையை வாயில் துணியை வைத்து அடைந்து வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பணி முடிந்து திரும்பிய தாய் குழந்தையை தேடிய போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தேடிச்சென்று பார்த்த போது குழந்தையின் மீது பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையை முழுமையாக பார்த்த போது 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருப்பதும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அப்பகுதியினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே அப்பகுதி பொது மக்கள் , குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக் கோரியும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரியும், 300- க்கும் மேற்பட்ட பொது மக்கள் போயம்பாளையம் நால் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், குற்றவாளியை விரைந்து பிடிப்பதாகவும், போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றவாளி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.