திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கிராமத்தில் சுமார் 200 தலித் குடும்பங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதேபோல் அலகுமலை முருகன் கோவிலும் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க அலகுமலை பகுதியில் இத்தனை ஆண்டுகளாய் பொதுமக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அமைக்கப்பட்ட சுமார் 3 கி.மீ தூரம் வரையிலான வேலி சமூக நல்லிணக்கத்தை கேள்விக்குரியதாக்குவதோடு, தீண்டாமை பிரச்சினையையும் ஏற்படுத்தியிருக்கிறது

அலகுமலை கிராமத்தின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலை சுற்றிலும் சுமார் 2 ஏக்கர் காலி நிலம் உள்ளது.
இங்கு ஈஸ்வரன் கோவில் தேர் நிற்குமிடம் தவிர மற்ற இடம் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானமாகவும் , குடிநீர் ஆதாரமாக உள்ள கிணறும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் காங்கீரீட் சாலையும் அமைத்துக்கொடுத்துள்ளது.

இதன் மூலம் ஊராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஆழ்துளாய் கிணறுகளுக்கு செல்லும் முக்கிய பாதையாகவும். மேலும் தாழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து செல்லக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் இந்த பாதையை கடந்தே துவக்கப்பள்ளிக்கும் , உயர்நிலைப்பள்ளிக்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி திருப்பூர் ஊராட்சியின் முன்னால் தலைவர் சண்முகம் தலைமையில் சிலர் காங்கீரீட் சாலையை சேதப்படுத்தியும் , கோவிலை சுற்றியும் கம்பி வேலியை அமைத்துள்ளனர்.

திடீரென அமைக்கப்பட்ட இந்த கம்பிவேலியால் பெண்கள் குடிநீர் எடுத்துச்செல்லும் பாதையும் , பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் சாலையும் மறிக்கப்பட்டுள்ளன . இதனால் இவர்கள் சுமார் 2 கி.மீ வரை சுற்றிச்செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள்
ஆரம்பத்தில் இப்பிரச்சினை குறித்து வட்டாட்சியர் , கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என பலரிடமும் பொதுமக்கள் நேரிடையாகவும் தபால் மூலமாகவும் மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை பல மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் வேலி அமைத்துள்ள இடம் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என தெரிவித்திருந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட ஆவணங்களில் அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானதல்ல எனவும் அது ஊராட்சிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு இடம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இப்பிரச்சினை குறித்து நம்மிடையே அப்பகுதியினர் கூறுகையில், "நெடுங்காலமாக பொதுப்பாதையாக இருந்த இடத்தில் எங்கள் சாதியை சுட்டிக்காட்டி இது போன்று வேலி அமைத்திருப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது. எங்கள் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளை சந்திக்க சென்று நாள் முழுக்க காத்திருந்தும் எங்களை யாரும் சந்திக்கவில்லை." என்று வேதனையோடு தெரிவித்தனர்.
பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத இச்சம்பவத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தீண்டாமை வேலியை தானாக அகற்றும் போராட்டத்திற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது.