நீலகிரி : நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் வழங்கப்பட இருந்த லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் வழங்கப்பட இருந்த லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு பெரும் புள்ளிகள் சார்பில் லஞ்சப் பணம் போனசாக வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, இன்று மாலை உதகை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, கீதா லட்சுமி, ரங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கோபாலகிருஷ்ணன் உட்பட சில ஒப்பந்ததாரர்கள், அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வழங்க இருந்த லஞ்சப் பணம் ரூ. 2,01,500-ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர், அவர்களிடம் கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்