திருப்பூர் : திருப்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் துவாரகை நகர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி பின்னலாடை சார்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்றைய தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்றுள்ளார். மாலையில் அவரது மகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு மற்றும் பீரோக்கள் திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த சின்னசாமி, பீரோவில் இருந்த 16.4 சவரன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் பணம் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடந்த வாரம் தனது வண்டி சாவியுடன் வீட்டுச்சாவியும் காணாமல் போன நிலையில், அக்கம்பக்கத்தினர் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரையடுத்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .