சென்னை : கட்டணம் செலுத்தி குடிநீர் பெறுவதில் முறைகேடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்களை தொடர்ந்து, ஒருமுறை கடவுச்சொல் (OTP) வசதியை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெறும் வசதி உள்ளது. கழிவுநீர்த் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றுவதற்கும் கட்டண சேவை உள்ளது. மேற்கண்ட சேவைகளைப் பெற முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில், சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பதிவு எண் அடிப்படையில் சேவை வழங்காமல் கூடுதலாக பணம் கொடுத்தால் அவர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கட்டணம் செலுத்தி குடிநீர் பெறும் நுகர்வோருக்கு இன்று முதல் ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓடிபி வசதியையும், சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. பதிவு எண்ணோடு சேர்த்து OTP எண்ணும் அனுப்பப்படும். இந்த எண் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மேலும், கழிவுநீர்த் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றுவதற்கும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.