கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவை : லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை போது, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை :  லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை போது, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பாபு (51).  இவர் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, ஆய்வாளர் பாபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இதனிடையே, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்ததால், அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு வாந்தி எடுத்த போது, நடிப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்ததாக உடன் இருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

மாரடைப்பால் உயிரிழந்த கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபுவிற்கு,  அகிலா என்ற மனைவியும், ஒரே மகன் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடத்திய  சோதனையில் ரூ. 1,04,718 பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...