தொடங்கியது வடகிழக்கு பருவமழை : அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவையில் கனமழை எச்சரிக்கை

கோவை : வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதால், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதால், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 29 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவுநேர வெப்பநிலை 19 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரையில் 5 முதல் 6 கிலோ மீட்டர் வரை மட்டுமே காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இதனால், மழையானது நிதானமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. 

பொதுவாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 328 மி.மீ. மழை பெய்ய கூடும். இந்த வருடம் 368 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் 146 மி.மீ. மழை எதிர்பார்த்த நிலையில் 151 மி.மீ. தற்போது கிடைத்துவிட்டது. கோவையைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு 46 சதவீத மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால், இந்தாண்டு மூன்று மாதங்கள் மீதம் இருக்கும் நிலையில், தற்போது 56 சதவீதம் மழைப்பொழிவு கிடைத்துள்ளது. ஆண்டு மழை 674 மி.மீ. எதிர்பார்த்த நிலையில் தற்போது 785 மி.மீ. கிடைத்துள்ளது. விவசாயிகள் நிலத்தினை உழுது வைக்க வேண்டும். நீர் வடிகால்களை சீர் செய்து வைக்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...