கோவை : 82 வயதான நாடக ஆசிரியரும், நாடக கலைஞருமான என்.முத்துசாமி சென்னையில் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் திருச்சி சாலை அருகே அமைந்துள்ள பெர்க்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அரவிந்தன், திலீபன் உள்ளிட்ட பல்வேறு நாடக கலைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர், நிகழ்வை பி.எஸ்.ஜி கல்லூரியைச் சேர்ந்த உடல்வெளி மற்றும் நிலா முற்றம் அமைப்புகள் நடத்தினர்.

இதில் கவிஞர் புவியரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முத்துசாமியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, என்.முத்துசாமியின் படைப்புகளைப் பார்க்கையில், அவருக்கு நிகர் அவரே என்று கூறினார்.

தொடர்ந்து நிலா முற்றம் அமைப்பு சார்பில் சபை நாடகம் நடத்தப்பட்டது. அதன் மூலம் மாணவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.