சென்னை: வழக்கத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக 12 சதவீதம் வடகிழக்கு பருவமழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன் கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்யும். முதலில் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மற்ற இடங்களில் பின்னர் தொடங்கும். எண்ணூர், மகாபலிபுரம், பொன்னேரியில் தலா 5 செ.மீ, மழைப் பதிவாகி உள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் கூடுதலாக 12 சதவீதம் மழைப்பொழிவு கிடைக்கும்.
இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழன் கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்கும். படிப்படியாக உட்புறப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்." என்று கூறியுள்ளார்.