கோவை: வெள்ளலூர் பகுதியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூபாய் 10 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கோவை அடுத்த வெள்ளலூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரிவரதராஜ கோவில் உள்ளது. இதில் கோவிலுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளது.

கோவில் அருகே இருந்த நிலத்தை அப்பகுதியில் உள்ள தனிநபர்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா, மதுக்கரை தாசில்தார் விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூபாய் 10 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மீதம் உள்ள நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.