கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையால் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய வாகனம் எடுப்போர், ஓட்டுனர் உரிமம் பெறுவோர், வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலக முன் கதவு அடைக்கப்பட்டது.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள், மக்கள் வெளியே காத்துக்கிடக்கின்றனர்.