கோவை: கோவையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் செல்போனில் படமெடுத்து புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
கோவை: கோவையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் செல்போனில் படமெடுத்து புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை அதி வேகமாக இயக்கி விபத்துக்கு வழி வகுக்கின்றனர்.
இப்படி தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சாலை விதிகளை மீறி செல்கிறது. அதேபோல தனியார் பேருந்து ஓட்டுநர்களும், அரசு பேருந்து ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதிகளை மதிக்காமல் சாலைகளை கடக்கின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல முயற்சிகள் எடுத்தாலும் பேருந்து ஓட்டுனர்கள் திருந்துவதில்லை. அதேபோல விதிகளை மீறும் அனைத்து பேருந்துகளையும் காவல்துறையினர் துரத்திச் சென்று அபராதம் விதிக்கும் அளவிற்கு காவல் துறையில் போதுமான அளவிற்கு காவலர்களும் இல்லை.
இப்படி தினமும் எண்ணற்றவர்கள் வாகன விதிகளை மீறுவதை கட்டுப்படுத்த கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தற்போது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு 'போலீஸ் இ-ஐ' என்று பெயர். இந்த செயலி விரைவில் கோவை மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
செயலிகள் மூலம் செயல்பாடு
ஆண்ட்ராய்டு காலம் வந்தது முதல் தற்போது செயலியின் மூலம் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக காவலன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி பொதுமக்கள் பயனடைந்தும் வருகின்றனர்.
அதேபோல கோவை மாநகரின் போக்குவரத்து விதிக்காக தற்போது வந்துள்ள இந்த ஆப்பிற்க்கும் பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொது மக்களில் ஒருவரான நாகராஜ் கூறியதாவது:-
இந்த நவீன காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறலை தடுக்கவும் வந்துள்ள இந்த புதிய செயலி கண்டிப்பாக பொது மக்களுக்கு உதவும். சாலையைக் கடக்கும் போது பல்வேறு விதிமீறலை காண்கிறோம். ஆனால், அவை அனைத்தையும் புகார் தெரிவிக்க வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள செயலி, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும்.
இந்த செயலியை நாங்கள் பயன்படுத்தி சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க உதவுவோம் என்று கூறினார்.
இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், "போக்குவரத்து விதிகளை மீறுபவர் மீது நடவடிக்கைகள் எடுக்க தற்போது புதிய செயலியை தனியார் மென்பொருள் நிறுவனத்தின் உதவியில் உருவாக்கியுள்ளோம். இந்த ஆப் மூலம் பொது மக்கள் புகைப்படங்களை பதிவிட்டு புகார்கள் தெரிவிக்கலாம். 'போலீஸ்-இ-ஐ' என்ற அப்ளிகேஷனை முதலில் தரவிறக்கம் செய்து தங்களது பெயர் தொலைபேசி எண்ணை பதிவு செய்து அந்த அப்ளிகேஷனை திறந்தால் செய்தால் காமிரா வரும், அதன் மூலம் நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தியிருத்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவிக்கலாம்." என்றார்