திருப்பூர் : திருப்பூர் தட்டான் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கஸ்தூரி. கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது மகள் மற்றும் மகன் மணிவேலுடன் வசித்து வருகிறார். பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

விளையாட்டு கோட்டா மூலம் கோவையில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி ஐடி பிரிவில் முதலாமாண்டு படித்து வரும் மணிவேலுக்கு, சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
ஜூடோ
அவரது ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்தது ஜூடோ விளையாட்டு. கடந்த 5 ஆண்டுகளாக ஜூடோ விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் இதுவரை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மணிவேல் 19 வயதிற்கு கீழான பிரிவினருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்த ஜூலை மாதம் பஞ்சாபில் நடைபெற்ற 5-வது மாணவர்களுக்கான தேசிய ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு வெள்ளிப் பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல் நேபாளத்தில் நடைபெற்ற இண்டோ-நேபாள் தேசிய விளையாட்டு போட்டியிலும் பங்குபெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும், கடலூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக இம்மாதம் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளார். ஆனால் திறமையிருந்தும், போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் வறுமையின் காரணமாக அப்போட்டிகளில் பங்குபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
மொத்த ஊதியமும்
இதுகுறித்து மணிவேலுவின் தாயார் கஸ்தூரி கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வரும் மணிவேலுக்கு என் மொத்த ஊதியமும் கொடுத்து இதுவரை உதவி வந்தேன். அவருக்கென விளையாட்டில் பங்குபெறுவதற்கான ஆடைகள் கூட சொந்தமாக இல்லாத சூழ்நிலையில், ஒவ்வொரு முறையும் அதனை வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்.
ஒரு முறை வெளிமாநிலங்களில் கலந்து கொள்ளும் ஆட்டத்திற்காக 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் எனக்கு கிடைக்கிற ஊதியம் மகள் மற்றும் மகன் கல்விச் செலவுக்கே பற்றாக்குறையாக இருந்தது. விளையாட்டு கோட்டாவில் இடம் கிடைத்து கல்லூரியில் படித்து வரும் மணிவேல் கல்லூரி சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள கல்லூரி நிர்வாகம் உதவி செய்து வரும் நிலையில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ நிரந்தரமாக உதவ முன்வந்தால் நம் நாட்டிற்கு நற்பெயரை எடுத்துத் தருவார்." என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பயிற்சியாளர்
அரசுப்பள்ளியில் படித்து விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பல பரிசுகளைப் பெற்றுள்ள பயிற்சியாளர் பூவரசு இன்றளவும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். அவரது இலவச பயிற்சியினை பெற்றுவரும் மணிவேல் இந்தளவுக்கு முன்னேறியுள்ளதைப் பெருமையாக தெரிவிக்கும் பூவரசு இன்னும் உதவிகள் கிடைக்கும்பட்சத்தில் பல சாதனைகள் புரிவார் என தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கெடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் பதக்க பட்டியலை ஆர்வமுடன் பார்வையிடும் நம் அரசும், விளையாட்டில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களும், தனியார் அமைப்புகளும் இந்த வீரருக்கு உதவ முன்வந்தால், இந்தியாவில் மணிவேல் போன்ற விளையாட்டு வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும், இந்தியாவும் விளையாட்டுத் துறையில் முன்னேற முடியும்.